Thursday, February 3, 2011

சொல்லத்துடித்திடும் நினைவுகள், நிகழ்வுகள்.



என் இருப்பிடம் பற்றி அடிக்கடி சில சந்தேகங்கள் ஏற்படுவதுண்டு. மனக்கணக்கில் எழுந்த கோடுகளால் வரையறை செய்துவிட்டுப்போன “பூமத்திய இரேகைக்கு” சற்று கீழாக ஐந்துகலையில், அடுத்த புதிருக்கான வலியுடன் காத்திருக்கும் நாட்டின் சொந்தக்காரி நான்.

என்னைச்சுற்றிய தற்காலிக அமைதிகள், சூழலில் வழமைபோல மாற்றங்களை வேண்டுமானால் மாற்றிவிட்டுப்போகலாம். நான் மாறுவதாக இல்லை.
மாறும் அளவிற்கு நான் நன்றிகெட்டவளும் இல்லை. 
அதற்காக மறத்தால் கொடியவலங்கு துரத்திய வீரப்பெண்ணும் நானில்லை.

இவள் பெண்ணியம் என்ற வட்டத்தினுள், உட்கார மறுப்பவள், உயிர்தந்தவன், ஆண், என்னுள் ஓடுவதும் ஆணின் ரத்தமே. அம்மாவைவிட அப்பாவை அதிகம் நேசிக்கும் அன்பு மகள்களில் ஒருத்தி.

இதுதான் என் சுயத்தோடு ஒரு சுய எழுத்துக்கள். 
வடகப்பட்டியர் பாணியிலேயே சொல்லிவிடுகின்றேன்..
“இங்கே நான் தீட்ட நினைப்பகைவள் சித்திரங்களே
ஆனால் வருபவையோ கோடுகளாகவே இருக்கும்
ஆனால் அந்த கோடுகளும் சித்திரங்களே”

எல்லோரும் முதல்பதிவை தங்கள் தயாருக்கு சமர்ப்பிக்கின்றார்களே! இதோ என் சமர்ப்பணம், எனக்கு உயிர்தந்த என் தந்தைக்காக

11 comments:

  1. தொடரட்டும் உங்கள் பதிவுகள்

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. வணக்கம் சகோதரி, வலை உலகிற்கு வருக வருக என வரவேற்கிறோம். என்ன ஒரு இடுகையுடன் நிறுத்தி விட்டீர்கள்? தொடர்ந்தும் எழுதுங்கோ. உங்களின் தமிழுக்கு நிகரேதும் இல்லை என்றே கூறலாம். ஆரம்ப பதிவு தமிழோடு தவழ்கிறது. அகலாங்கு நெட்டாங்கு, பாகை, கலை, விகலை இவற்றினை வைத்துப் பார்க்கும் போது ஐரோப்பாவில் நீங்கள் இருக்கிறீர்கள் என நினைக்கிறேன். காரணம்
    “பூமத்திய இரேகைக்கு” சற்று கீழாக ஐந்துகலையில்,//

    அடுத்த விடயம்

    அதற்காக மறத்தால் கொடியவலங்கு துரத்திய வீரப்பெண்ணும் நானில்லை.//

    இது எல்லோரும் மறத்தால்- வீரத்தால் தான் எதிர்ச் சண்டை போடுவார்கள்.
    மறத்தால் கொடிய விலங்கு துரத்தியவள் என்று நான் அறியவில்லை. ஆனால் முறத்தால் கொடிய விலங்கு துரத்தியவள் என்று அறிந்துள்ளேன். ஆகவே அது மறம் அல்ல முறத்தால் என்று வர வேண்டும்.
    முறம்- சுளகு,


    நல்ல மறத்தினால்
    வீரத் திறத்தினால்
    கையிலிருந்த ’’முறத்தினால்
    புலியைத் துரத்தினாள்
    ஒரு தமிழ் பெண்..

    இதுவே எமது பழந்தமிழ்ப் பெண்ணொருத்தி முறத்தால் தன் மறத்தை நிலை நாட்டிய பாடல். ஆகவே மறத்தை முறம் என்று மாற்றி விட்டால் தங்களின் இனிமையான உரை நடைக்கு இன்னும் இன்னும் அணி சேர்க்க்கும் தமிழ்.

    ReplyDelete
  4. வணக்கம் நச்சத்திரா அருமையான எழுத்துநடை. தொடர்ச்சியாக ஆக்கபூர்வமாக எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. வணக்கம் வருக வருக...

    ReplyDelete
  6. உங்களுக்கு எப்படிச் சொல்வதென சங்கடமாயிருக்கிறது ஆனால் ஆரம்பத்திலேயே திரத்திக் கொள்ளலாம் என்பதற்காகவே சொல்கிறேன் தங்களத புளொக்கின் பெயரில் ஏற்கனவே ஒரு புளொக் இருக்கிறது சகோதரம்.. இது தான் அது
    Fmathar-itsallaboutmine.blogspot.com

    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.
    என் சிங்கக்குட்டி சீறி வந்த நாளும் என் மீள் வருகையும்.

    ReplyDelete
  7. ஈழ தமிழ் மகளுக்கு என் வணக்கம்....
    எல்லாத்துறையிலும் வென்றிட வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. Word verification இத எடுத்துடுங்க....

    //அடுத்த புதிருக்கான வலியுடன் காத்திருக்கும் நாட்டின் சொந்தக்காரி நான்.//

    ஈழத்திருமகள்?

    ReplyDelete